டேட்டிங் தொடர்பாக சிறுமிக்கு அறிவுரை வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன் - இணையதளங்களில் வைரலாகும் வீடியோ..!
டேட்டிங் தொடர்பாக சிறுமிக்கு அறிவுரை வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன் - இணையதளங்களில் வைரலாகும் வீடியோ..!
சிறுமி ஒருவருக்கு டேட்டிங் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுரை வழங்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், 30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீரியசாக நடக்க மாட்டார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார். இதைக்கேட்ட சிறுமி, இந்த கருத்தை தாம் மனதில் வைத்து கொள்வதாக கூறிவிட்டு, சிரித்தார்.
சமூகவலைதளங்களில் வெளியான இந்த வீடியோ, இதுவரை 50 லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும், பைடனின் கருத்தால் சிறுமி அசவுகரியமாக உணர்ந்ததாக பதிவிட்டுள்ளனர்.
Comments