தாயை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்தபோது 5 வயது மகளை மறந்து விட்டுச் சென்ற தந்தை

0 6020

மலேசியாவில் இருந்து வந்த தாயை வரவேற்க திருச்சி விமான நிலையம் வந்தபோது தந்தையால் மறந்து விட்டு செல்லப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

  திருமயத்தைச் சேர்ந்த சையது இப்ராஹிமின் தாயார் கமாமிஷா, மலேசியாவில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு திருச்சி வந்தார். அவரை   வரவேற்க சையது இப்ராஹீம் தனது 5  வயது மகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்திருந்தார். பின்னர் தாயை காரில் அழைத்து கொண்டு ஊர் திரும்பியபோது, மகளை அங்கேயே  விட்டு சென்றார்.

மகள் காணாததை பாதி வழியில் கண்டுபிடித்த இப்ராஹிம், திருச்சி விமான நிலையம் வந்து தேடினார்.  அப்போது குழந்தை பத்திரமாக திருச்சி விமான நிலைய முனையத்தின் மேலாளர் அறையில் இருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments