நாட்டின் வரலாறு திருத்தி எழுதப்படும் - அமித் ஷா திட்டவட்டம்

0 3769

நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர், பாண்டியர், பல்லவர் கால ஆட்சியின் சாதனைகள் வரலாற்றில் இடம் பெறாதது ஏன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அவர், வரலாற்று ஆசிரியர்கள் முகலாய பேரரசுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கூறினார்.

பாண்டியர்கள் 800 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ததாகவும், சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும்,  சுட்டிக்காட்டிய அமித்ஷா, அவர்களின் வரலாற்றை குறிக்கும் புத்தகங்கள்  இல்லை என்றார்.

  பல ஆண்டுகளுக்கு பின் நமது கலாசாரம் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், வரலாற்றை மாற்றி எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments