ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கக் கோரி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதலமைச்சருக்கு கடிதம்.!

0 2219

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிகளவில் ரேஷன் அரிசி கர்நாடகாவுக்கு கடத்தப்படுவதாகவும், கடத்தப்படும் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 16 மாதங்களில் தனது குப்பம் தொகுதியில் மட்டும் 13 வழக்குகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ள சந்திரபாபு நாயுடு, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் அந்த கடிதத்துடன் இணைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments