உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி.!

0 3793

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றார். 

பொறியியல் கலந்தாய்வு குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments