சென்னையில் பேராசிரியரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய 4 பேர் கைது.!

சென்னையில் பேராசிரியருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் பெண்ணுடன் இருப்பது போல் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயனாவரம் பகுதியை சேர்ந்த 60 வயதான ராஜேந்திரன் என்பவர் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் சுயதொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி ராதா என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
பணத்தை திருப்பித் தராததால், ராதா மீது நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பேராசிரியரை தொடர்பு கொண்ட ராதா, சமாதானம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி புஷ்பா என்பவரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு ராஜேந்திரனுக்கு கொடுத்த குடிநீரில் மயக்க மருந்து கலந்ததாக கூறப்படும் நிலையில், மயங்கிய நிலையில் இருந்தவருடன் பெண் ஒருவர் இருப்பது போல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அரை நிர்வாண கோலத்தில் மயக்கம் தெளிந்தவரிடம், பணத்தைத் கேட்டால் வீடியோ வெளியிடப்படும் என ராதா உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து போலீசாரிடம் ராஜேந்திரன் அளித்த புகாரில், ராதா உள்ளிட்ட 4 பேரை கைது செய்யப்பட்டனர்.
Comments