கேரளாவில் 6 மாவட்டங்களில் நாளை பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை - கேரள அரசு

0 4446

கேரள மாநிலத்தில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களில் நாளை பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதியிருந்த கடிதத்தில், இந்த ஆண்டு கேரளாவில் ஜனவரி 15-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை மாற்றி பொங்கல் பண்டிகையன்று 14-ந் தேதி விடுமுறை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, கோரிக்கையை ஏற்று ஜனவரி 15-ந்தேதி விடுமுறையை மாற்றி கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் நாளை  14-ந் தேதி விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments