குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

0 1650

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி ஊருக்கு வெளிப்புறமாக அமைக்க வேண்டும் என பேருந்துப் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தின் எதிரே இருந்த சாலையில், இளைஞர் ஒருவர் குடித்து விட்டு குடிபோதையில் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார்.

இதனால், சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியிலேயே நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments