காரில் வந்து திருடி சென்றது பீகார் கொள்ளையர்களா.? சேலத்தில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் கொள்ளை.!

0 22007

சேலத்தில் நள்ளிரவில் காரில் வந்து அடுத்தடுத்து நான்கு கடைகளில் கொள்ளையடித்த மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

அழகாபுரம் பகுதியில் உள்ள துளசி பார்மசி மற்றும் மூன்று துணிக்கடைகளில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைக்காமல், ஷட்டரை நெம்பி உள்ளே புகுந்த திருடர்கள், கடையில் இருந்த இருபது ஆயிரம் பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த 4 கடைகளில் நடைபெற்ற திருட்டு குறித்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கைரேகை பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை துவங்கியுள்ள போலீசார், வெள்ளை நிற காரில் வந்து திருட்டில் ஈடுபட்டது பீகார் மாநில கொள்ளையர்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments