மெக்சிகோவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 53 அகதிகள் உயிரிழப்பு- 45 பேர் படுகாயம்

0 2164

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் உள்பட பலரை ஏற்றிக் கொண்டு மெக்சிகோவின் Chiapas மாகாணம் வழியாக அமெரிக்க எல்லைக்குச் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர், ஆபத்தான வளைவை கடக்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தாகவும்,
58 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காயமடைந்தவர்கள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments