3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தல்... திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

0 1672

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்து சட்டம் இயற்றிட வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடியதாக கூறி விவசாயிகளுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments