சென்னையில் 13ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை

0 2217

சென்னை உள்ளிட்ட இடங்களில் 13ஆவது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில் தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் 13ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஏற்கனவே விற்கப்பட்ட விலையிலேயே இன்றும் எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments