சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழிபறி கொள்ளையர்கள் இருவர் கைது

0 8987
சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்

சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழிபறி கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்க, முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொலை, கொள்ளை, பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சாலையில் தனியாக நடந்தும் பெண்கள், இருசக்கர வாகனத்தில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து, அவர்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக கவிதாசன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்ததில், நேற்று முன்தினம் ஒரேநாளில் நான்கு பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்து இருப்பது தெரியவந்தது.

பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வதுடன், அவர்களிடம் இருக்கும் செல்போன் மற்றும் கைப்பையை மிரட்டி வழிபறி செய்வதையும் கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments