பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த டிரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்

0 1638
பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த டிரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்

பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த டிரோன் மூலம், ஜம்மு காஷ்மீர் பகுதியில் போடப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், சம்பா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியில் காலையில் டிரோன் நடமாட்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பாலிதினில் சுற்றப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இதன் பின்னணியில் இருக்கிறதா என்று பாதுகாப்பு முகமைகள் விசாரித்து வருகின்றன. கடந்த ஜூலை 23 ஆம் தேதி 5 கிலோ வெடிபொருட்களை சுமந்து வந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments