ஹரிதுவார் கும்பமேளாவில் பங்கேற்ற 1 லட்சம் பேருக்கு தொலைபேசி எண்களில் அழைத்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்தது குறித்து விசாரனை

0 2355
ஹரிதுவார் கும்பமேளாவில் பங்கேற்ற 1 லட்சம் பேருக்கு தொலைபேசி எண்களில் அழைத்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்தது குறித்து விசாரனை

ஹரிதுவார் கும்பமேளாவில் பங்கேற்ற ஒரு லட்சம் பேரின் தொலைபேசி எண்களுக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டு, அவர்கள் ஆர்டிபிசிஆர் சோதனை செய்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கும்ப மேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஓரிரு பரிசோதனை லேப்கள் மூலம் போலியாக, கொரோனா பரிசோதனை செய்ததாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பல லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் இவ்வாறு ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் போலிச் சான்றிதழுடன் வந்தனர். அவர்களின் தொலைபேசிக்கு அதிகாரிகள் குழு ஒன்று பேசி வருகிறது.

இதற்கென எட்டு பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.இது தொடர்பாக மூன்று நிறுவனங்களின் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments