அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களை இழிவாக அவதூறு செய்ததாக சமூக வலைதளப்பதிவர் கிஷோர் கே சுவாமி மீது குண்டாஸ் பாய்ந்தது

0 3347

ரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களை இழிவாக அவதூறு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்த புகாரில் கிஷோர் கே ஸ்வாமி என்ற நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

அடிக்கடி அநாகரிகமாக பதிவிட்டதாக சர்ச்சையில் சிக்கும் இந்த நபர், அண்மையில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் குறித்து இழிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 14 புகார்கள் கிஷோர் கே சுவாமி மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளன. அதில், அடுத்தடுத்து மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சமூக அமைதிக்கு தொடர்ந்து ஊறு விளைவிப்பவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments