காங்கோ நாட்டு மலைப் பகுதியில் மண்ணோடு மண்ணாய் கிடந்த தங்கத்தாது: போட்டி போட்டு வெட்டி எடுத்துச் சென்ற கிராம மக்கள்

0 4148
காங்கோ நாட்டு மலைப் பகுதியில் மண்ணோடு மண்ணாய் கிடந்த தங்கத்தாது

காங்கோ நாட்டில் தங்கமலையை தோண்டி மக்கள் தங்கத்தை எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமத்தில் உள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் கோடாரி, கடப்பாரை மற்றும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்த மலை பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டி பைகளில் போட்டு வீட்டுக்கு எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அங்கு விரைந்த அதிகாரிகள், மலையில் மண்ணை தோண்டுவதற்குத் தடை விதித்தனர். மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மக்கள் தங்களுக்கு வேண்டிய அளவுக்கு தங்கத்தை பெயர்த்து எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments