உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் 311 வாரங்கள் முதலிடம் பிடித்து ஜோகோவிக் புதிய சாதனை

0 1211
உலக டென்னிஸ் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் 311 வாரங்கள் முதலிடம் பிடித்து ஜோகோவிக் புதிய சாதனை

லக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை செர்பிய வீரர் Novak Djokovic முறியடித்தார்.

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Novak Djokovic தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

5 வெவ்வேறு காலகட்டங்களில் அவர் மொத்தம் 311 வாரங்கள் முதலிடத்தில் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

48 ஆண்டு கால உலக தரவரிசை வரலாற்றில் இதற்கு முன்பு ரோஜர் பெடரர் மொத்தம் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments