சாலையோரத்தில் மின்மாற்றியில் மோதிய கார்.. மது போதையில் ஓட்டியவர் உயிரிழப்பு!

0 1930
குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார், மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பவானி அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றவர் மின்மாற்றியில் கார்  மோதியதில் உயிரிழந்தார். 

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சரவணக்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கவுந்தப்பாடியில் இருந்து தனது நண்பர்கள் 3 பேருடன் பவானி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பாலப்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி, அருகிலிருந்த மின்மாற்றியின் மீது மோதியது. இதில், மின்மாற்றி சேதமடைந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

விபத்தில் படுகாயமடைந்த சரவணக்குமார் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள்,  காரில் இருந்த  அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினர். சரவணக்குமார் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments