போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து வரம்பு மீறி பேசியதாக நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

0 5715
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து வரம்பு மீறி பேசியதாக நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து வரம்பு மீறி பேசியதாக நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகர்கோவில் வந்திருந்தார்.

அவரை வரவேற்கும் விதமாக நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பேனர்கள், கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போக்குவரத்தை சீர் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளிலும் திமுக கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை அகற்ற முயன்றபோது, நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் போலீசாரை ஆபாசமாகப் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் மீது நேசமணிநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments