தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

0 13426
தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கையை ஒட்டிய வங்க கடல் பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

9 ஆம் தேதி அன்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

10 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும், 12 ஆம் தேதி ஒரு சில இடங்களில் மழை  பெய்யக்கூடுமென்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments