காதல் விவகாரத்தில் வாய் பேச முடியாத இளைஞர் படுகொலை.. 4 பேர் கைது..!

0 1482

ஓசூரில் காதல் விவகாரத்தில் கர்நாடக இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான சல்மான்கான். வாய் பேச முடியாத இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளதுடன், அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணையும் காதலித்து வந்துள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்த நிலையில், இளம்பெண்ணுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பி அதனை தடுத்து நிறுத்தியதுடன், மற்றொரு திருமண ஏற்பாட்டையும் சல்மான்கான் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி சல்மான்கான் மாயமான நிலையில் அவரை கண்டுபிடித்து தரக்கோரி 26-ம் தேதி அவரது தயார் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே சல்மான்கானின் உடல் 3 தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தாவரக்கரே பகுதியில் உள்ள குட்டையில் கண்டெடுக்கப்பட்டது. கொலை தொடர்பாக ஓசூர் ராம்நகரை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments