டெல்லியில் பட்டப்பகலில் காரை வழிமறித்து 2 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற 7 பேர் கைது..!

0 1264

டெல்லியில் பட்டப்பகலில் பிரகதி மைதான் சுரங்கவழியில் காரை வழிமறித்து 2 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து காரை வழிமறித்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணப்பையைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இந்த வழக்கில் முதலில் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 4 பேரையும், கொள்ளைக்குத் திட்டம் வகுத்த உஸ்மான் என்பவரையும் கைது செய்தனர்.

கடன்களை அடைக்க அவர் கொள்ளையடித்ததாகவும் , சுரங்கப்பாதையில் எதிர்ப்பு இருக்காது என கொள்ளைக்கான இடமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் விசாரணைக்குப் பின்னர் போலீசார் தெரிவித்தனர்.2 பைக்குகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments