நான் பிரதமர் மோடியின் ரசிகன் - எலன் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலன் மஸ்க் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் செய்ய உள்ள முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்திய எலன் மஸ்க், அடுத்த ஆண்டில் தாம் மீண்டும் இந்தியா வர திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி மிகவும் சரியான முறையில் இந்தியாவுக்கு பணியாற்றி வருவதாக கூறிய எலன் மஸ்க், ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவுக்கு வர இருப்பதாக குறிப்பிட்டார். இதன் மூலம் இந்தியாவின் கிராமங்களுக்கும் இணைய சேவை கிடைக்கும் என்று எலன் மஸ்க் தெரிவித்தார்.
உலகின் எந்த நாட்டைவிடவும் இந்தியா நம்பிக்கையளிக்கும் நாடாக இருப்பதாக கூறிய அவர் பிரதமர் மோடி இந்தியா மீதுமிகுந்த அக்கறையுள்ள தலைவராக இருப்பதாக கூறினார்.
இந்தியாவில் பெரிய முதலீடுகளை செய்ய மோடி தூண்டுதலாக இருப்பதாக கூறிய எலன் மஸ்க். தாம் மோடியை மிகவும் விரும்புவதாகவும் அவரது ரசிகன் என்றும் குறிப்பிட்டார்.
Comments