நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து -17 குழந்தைகள் பலி

0 1391

நைஜீரியா நாட்டில் ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தனர்.

வடமேற்கு மாகாணமான சொகோடோ அருகே உள்ள பகுதியில் இருந்து விறகு சேகரிப்பதற்காக சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உள்ளிட்ட 20-க்கும் அதிகமானோர் படகு ஒன்றில் பயணித்தனர்.

ஆற்றின் நடுவில் செல்லும் போது, திடீரென படகு கவிழ்ந்தது. விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமிகள்- 2 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படகில் பயணம் செய்து மாயமானவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments