மதுரை சித்திரைத் திருவிழாவில் செயின் பறிக்க முயன்று இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது!

0 5101

மதுரை சித்திரைத் திருவிழாவில் வழிப்பறி கும்பலுடன் வந்த இளைஞர் செயின் பறிக்க முயன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 5ந் தேதி நடைபெற்றது. அப்போது, ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து கூட்டத்தில் வழிப்பறி செய்துவந்த கும்பல் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே இளைஞர் ஒருவரிடம் செயின் பறிக்க முயன்றது.

அங்கிருந்தவர்கள் வழிப்பறி கும்ப லில் ஒருவனை மடக்கிபிடித்து அடித்து மிதித்து தாக்கினர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, கருப்பாயூரணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, குருநாதன், விஜய உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்த போலீசார், சித்திரைத் திருவிழா கூட்டத்தை பயன்ப டுத்தி வழிநெடுகிலும் வழிப்பறி செய்துவந்த சோலை அழகுபுரத்தைசேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments