''நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவு'' - முதலமைச்சர்

0 1109
''நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவு'' - முதலமைச்சர்

2 ஆண்டு கால திமுக ஆட்சியில் 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், நாட்டின் பணவீக்கம் அதிகரித்த போதிலும், தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்திருப்பதாகவும், வாங்கும் திறன் அதிகரித்து, உணவு பொருட்களின் விலையும் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றபோது தமது வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டதாக ஆளுநர் பொய் சொல்வதாகவும், சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதால் தான் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments