இன்று நடைபெறுகிறது இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு..!

0 1063

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை, 20 லட்சத்துக்கும் அதிமான மாணவ - மாணவியர் எழுதவுள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில், இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்ச மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் தேர்வு மையங்க ளைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments