பாலியல் குற்றச்சாட்டு : இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு

0 1137
பாலியல் குற்றச்சாட்டு : இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பிரிஜ் பூஷன் சரண் எதிராக மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், நீதி வழங்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துவந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments