சீனாவில், சுரங்கங்களில் நேரிடும் விபத்துகளை குறைக்க 'ஸ்மார்ட்-மைனிங்' தொழில்நுட்பம் மூலம் சுரங்கப்பணிகள்..!

சீனாவில், நிலக்கரி சுரங்கங்களில் நேரிடும் விபத்துகளை குறைக்க, சுரங்கப் பணிகளை கணிணி மையமாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
உலகளவில், நிலக்கரி உற்பத்தியில், 50 சதவீதத்திற்கும் மேல் சீனாவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சுரங்க விபத்துகளில் அங்கு 250 பேர் உயிரிழந்தனர்.
அதனை குறைக்கும் முயற்சியாக, சில சுரங்கங்களில், 5-ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஸ்மார்ட் மைனிங் முறையில் நிலக்கரி வெட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சுரங்கத்தின் மேலிருந்தபடி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் எந்திரங்களால் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
இதன்மூலம் சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments