சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பாதை அரசு ஏற்படுத்தும் - டிஜிபி சைலேந்திரபாபு..!

சென்னையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென தனியாக பாதை இல்லை எனவும், சைக்கிளை பயன்படுத்துவோர் அதிகமானால் தனிப்பாதை உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய டிஜிபி அதிக வாகனங்கள் சாலையில் ஓடுவது நல்லதல்ல எனவும்,பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் எனவும் பேசினார்.
Comments