தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்..!

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறைக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக 500 க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆயினும், கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, அரியலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் பேருந்துகள் கிடைக்காததால் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
Comments