ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இளங்கோவனை வெற்றி பெற செய்வது பெரியாருக்கு செய்யும் கைமாறு என்றார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அக்ரஹாரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளரை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேட்டுக் கொண்டார்.
Comments