RECENT NEWS

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

BIG STORIES

கிச்சுகிச்சு மா...சிக்கிக்கிச்சு மா.. ‘கூலி’ பட வில்லன் துரோகம்.. சௌபின் சாகிருக்கு சிக்கல்.. அப்படி என்னதான் செய்தார்?

Sep 02, 2025 01:42 PM

263

கிச்சுகிச்சு மா...சிக்கிக்கிச்சு மா.. ‘கூலி’ பட வில்லன் துரோகம்.. சௌபின் சாகிருக்கு சிக்கல்.. அப்படி என்னதான் செய்தார்?

கிச்சுகிச்சு மா...சிக்கிக்கிச்சு மா.. ‘கூலி’ பட வில்லன் துரோகம்.. சௌபின் சாகிருக்கு சிக்கல்.. அப்படி என்னதான் செய்தார்?

இன்றும் கொடைக்கானல் குணா குகை பகுதிக்கு நாம் சுற்றுலா சென்றால் ‘சுபாஷ்ஷு... சுபாஷ்ஷூ...’ என தமிழ்நாடு இளைஞர்கள் கூவி அழைத்து, குதூகலமாக கும்மியடிக்கும், சில நேரங்களில் டார்ச்சர் செய்யும் அளவுக்கு கேரள பாய்ஸைவிட, தமிழ்நாட்டு பாய்ஸால் கொண்டாடப் பட்டுக்கொண்டிருக்கும் மலையாள தமிழ் டப்பிங் திரைப்படம்தான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படத்தில், நரித்தனமான வில்லனாக மிரட்டி; விரட்டியதோடு, ‘மோனிகா...’ பாடலுக்கு பூஜா ஹெக்டேவுடன் இவர் போட்ட வெறித்தனமான ஆட்டம்தான், செம்ம வைரல்.

Manjummel Boys படத்தில், “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது” என அவ்வளவு ஆழமும் பேராபத்தும் சூழ்ந்த குகையின் இடுக்கில், விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நண்பனைக் காப்பாற்றும் காட்சியில், நம்மை goosebumps செய்த Soubin Shahir மீதுதான், இப்படியொரு துரோக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரூரைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள் சவுபின் சாகிர், ஷோன் ஆண்டனி, பாபு சாஹிர் ஆகியோர் மீது மோசடி புகார் தெரிவித்திருந்தார்.

அதாவது, மஞ்சுமெல் பாய்ஸ் படம் தயாரிக்க ரூ.7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என எர்ணாகுளம் சார்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த மோசடியால் ரூ.47 கோடி தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் சவுபின் ஷாகீருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது. வழக்கில் இருந்து முன் ஜாமீன் பெற்றுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களான சவுபின் ஷாகீர் உள்ளிட்டோர், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

ஆனால், தள்ளுபடி செய்யக்கோரிய மனுவையே கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், விசாரணையைத் தொடரவும் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனால், 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக, நடிகரும் தயாரிப்பாளருமான சவுபின் ஷாகீருக்கு பெரும் நெருக்கடியாய் மாறியது.

இந்த நிலையில், சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை செய்தது.

இந்த நிலையில், அப்படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான சவுபின் ஷாகீரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.

இந்தநிலையில்தான், தற்போது துபாயில் நடக்க உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் சவுபின் ஷாகீர் திட்டமிட்டிருந்தார். அதில், பங்கேற்பதற்கு துபாய் செல்ல அனுமதிக்குமாறு, கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதாவது, நடிகர் சவுபின் ஷாகீர் துபாய் செல்ல கோர்ட் தடை விதித்தது. "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பில் நடந்த நிதிமோசடி வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை கேரள நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சவுபின் ஷாகிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்துள்ளது, மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, கேரள உயர்நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்ல அனுமதி கோர, சவுபின் ஷாகிர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நண்பனைக் காப்பாற்றி கோடான கோடி திரையுலக ரசிகர்களின் இதயத்தில், அமர்ந்த சவுபின் ஷாகிர், தன்னை நம்பி கோடிக்கணக்கில் பணம் கொடுத்த நண்பரை தவிக்கவிடலாமா? இதை அவர் உணர்ந்துகொள்ளவேண்டாமா? என கேள்வி எழுப்புகிறார், அதே சினிமா ரசிகர்கள்!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies