மழையில் 1.16 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் முழுவதும் பாதிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக, வேளாண் உழவர் நலத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தவிர, நெற்பயிர் மட்டும் 1 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அடுத்தபடியாக கடலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது.
மேலும் ஆயிரத்து 195 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் சேதம் அடைந்துள்ளதாக, கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
Comments