அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
BIG STORIES
கட்டிட தொழிலாளர் போல வடக்கு கொள்ளையர் பதுங்கல்.. துப்பறிந்த தமிழக போலீஸ்..! நகை பணத்தை மீட்டு வந்தனர்
Jul 30, 2025 01:29 AM
154
கட்டிட தொழிலாளர் போல வடக்கு கொள்ளையர் பதுங்கல்.. துப்பறிந்த தமிழக போலீஸ்..!
சென்னை ஆவடி அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் கைரேகை பதியாமல் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை களவாடி சென்ற மேற்கு வங்க கொள்ளையர்களை போலீசார் சாமர்த்தியமாக துப்பு துலக்கி நகை பணத்துடன் கைது செய்தனர். கட்டிட தொழிலாளர் போல பதுங்கிய கொள்ளையர் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை, ஆவடி அடுத்த பொத்தூர் விஷால் நகரில் ஒரே வாரத்தில் இரு பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த ஆசாமிகள் ஒரு வீட்டில் மட்டும் 3 சவரன் நகைகளை திருடிச்சென்றனர். சொற்ப அளவு நகை என்பதால் போலீசார் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். அதன் தொடர்ச்சியாக அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் என்ற ஒப்பந்ததாரர் வீட்டிலும் கடந்த 17 ந்தேதி கைவரிசை காட்டினர்.
வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான வேலூர் சென்று திரும்பிய சாமிவேல், வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பதறி போய் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளுடன்., 2 லட்சம் ரூபாய் ரொக்கம் , 5 வெள்ளி குத்து விளக்குகள் திருடு போனது தெரியவந்தது.
கொள்ளை போன நகைகள் குறித்து சாமிவேல் அளித்த புகாரின் பேரில்., வழக்கு பதிவு செய்த டேங்க் பேக்டரி குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர், திருடர்கள் கையுறை அணிந்து திருடிச்சென்றதால், கொள்ளை போன வீட்டில் கைரேகை ஏதும் சிக்கவில்லை, அதே நேரத்தில் ஏற்கனவே திருடர்கள் கைவரிசை காட்டிய இரு வீடுகளில் கைப்பற்றப்பட்ட கைரேகையை , அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் வேலை பார்த்து வந்த 150 க்கும் மேற்பட்டோரின் கை விரல் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் இருவரது கைரேகைகள் ஒத்துப்போனது.
இந்த கைரேகைகளை வைத்து அங்கு கட்டுமான பணியில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான ராஜேஷ் ஷேக், அங்குர் என தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில்., கொள்ளையடித்த நகைகளை உடன் பணி புரிந்தவரிடம் கொடுத்து, மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைத்து விட்டு ஒன்றும் அறியா அப்பாவிகளை போல் கட்டிட வேலை பார்த்துக் கொண்டே, போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது தெரியவந்தது.
மேற்கு வங்க பிரதர்ஸ் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக சாமி வேல் வீட்டில் கையுறை அணிந்து கொள்ளையடித்த தாக தெரிவித்தனர். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற தனிப்படை போலீசார்., பீர்பும் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றனர். அங்கிருந்த ஹிலால், ஜல்டன் ஆகிய இருவரையும் முறையாக கைது செய்து., உருக்கிய 20 சவரன் தங்கத்துடன் மொத்தம் 40 சவரன் தங்க நகையையும், 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். அங்கிருந்து இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.
கடந்த 2001 - 2002 ஆம் ஆண்டுகளில் பவாரியா கொள்ளையர்கள் தமிழகத்தில் இருந்து 1100 சவரனுக்கு மேல் கொள்ளையடித்து சென்ற நிலையில் அவர்களிடம் இருந்து ஒரு சவரன் நகையை கூட போலீசாரால் மீட்க இயலவில்லை என்பது குறிப்பிடதக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu