கொல்கத்தாவில் 504 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட "தாலா" பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட தாலா பாலத்தை திறந்து வைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்புக்காக இந்தப் பாலம் மூடப்பட்டிருந்தது. முன்பு இருவழித் தடமாக இருந்த நிலையில் தற்போது இது நான்கு வழித்தடமாக கட்டப்பட்டுள்ளது.
இதற்கான செலவு 504 கோடியாகும் .இதில் 90 கோடி ரூபாய் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டது,. இந்தப் பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
Comments