அய்யனார் கோயிலில் சாமி கும்பிட வந்த இரு தரப்பினரிடையே மோதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அய்யனார் கோயிலில் சாமி கும்பிட வந்த இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆங்காங்கே குழுக்களாக கிடா வெட்டி வழிபாடு நடத்தினர். அப்போது திடீரென இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
மதுபாட்டில்கள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து வந்த திருவேங்கடம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments