முகப்பு
ரயில்வே சுவற்றில், விளம்பரம் எழுதுவதில் வாய் தகராறு.. அதிகாரிகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட போலீசார்..
Feb 25, 2025 01:00 AM
24
திருத்தணி நகராட்சியில் ரயில்வே துறைக்கு சொந்தமான சுவற்றில், விளம்பரம் எழுதுவதில், திமுக மற்றும் பாஜகவினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அவர்களை சமாதானம் செய்த போலீசார், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கட்சிகளின் சுவர் விளம்பரங்களை, நகராட்சி ஊழியர்களை வைத்து, வெள்ளை சுண்ணாம்பு அடித்து அழித்தனர்.