சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
வேலை வாங்கி தருவதாக மோசடி என "செந்தில் பாலாஜி மீது 2 வழக்குகளில் ஊழல் தடுப்பு சட்டம் பதிவு"...!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக மோசடி என சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வரும், 3 வழக்குகளில் இரண்டில் ஊழல் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதில் பண மோசடி என வழக்கு தொடரப்பட்டது ஏற்கனவே மோசடி,நம்பிக்கை மோசடி,தரகர்கள் மூலம் மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் தனித்தனியாக இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஊழல் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி முடிக்குமாறு சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு உத்தரவிட்டது மேலும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
Comments