''கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோவும், இந்த ஆண்டில் இதுவரை 13 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்...'' - போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோவும், இந்த ஆண்டில் இதுவரை 13 ஆயிரம் கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணாநகர் அண்ணா ஆர்ச் சந்திப்பில் போதைப்பொருட்ளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பேட்டியளித்த ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார், தமிழகத்தில் கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ரயில்களில் போதை பொருள் கடத்தி வருவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாகவும் மகேஷ்குமார் அகர்வால் குறிப்பிட்டார்.
Comments