பழனி பேருந்து நிலையம் அருகில் இளைஞர் பட்டப் பகலிலேயே வெட்டிக்கொலை.. தப்பியோடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!

0 7126

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முன்பு நின்றுகொண்டிருந்த இளைஞர் பட்டப் பகலிலேயே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் பேருந்து நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தபோது அரிவாளுடன் வந்த 2 பேர், வடிவேலுவின் முகம், கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வடிவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வடிவேல் ஏற்கனவே அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை சென்றுவந்தவர் எனக் கூறப்படுவதால், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments