அலபாமாவில் பிறந்த நாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு.. 6 பேர் பலி..!

0 1428

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் பார்ட்டியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டேட்வில்லே நகரில் உள்ள மஹோகனி டான்ஸ் ஸ்டூடியோ என்ற இடத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், சுமார் 20 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு காரணமாணவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இளம்வயதினர் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments