"தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" : புதிய திட்டம் அறிவிப்பு

0 1383

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கிய முதலமைச்சர், கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments