சமூக மாற்றத்தின் மூலம் மட்டுமே, பெண்களை நாம் நடத்தக்கூடிய விதம் மாற்றம் பெறும் - கனிமொழி!

0 1028

சமூக மாற்றத்தின் மூலம் மட்டுமே, பெண்களை நாம் நடத்தக்கூடிய விதம் மாற்றம் பெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் சென்னை இலக்கிய திருவிழாவில், பேசியபோது, கனிமொழி இவ்வாறு கூறினார்.

தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில்  உரையாற்றிய அவர், பெண்கள், தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக பேசினால், விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், பெரும்பான்மையான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாகவும் பேசினார்.

தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர் என கனிமொழி கருத்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments