முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது..!

0 2799

திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரையூர் ஊராட்சிமன்ற தலைவரான பன்னீர்செல்வம் குடும்பத்திற்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் விஜய் என்பவரது குடும்பத்திற்கும் நிலத்தகராறு உட்பட பிரச்சனைகளால் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பன்னீர் செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்ட விஜய், நேற்றிரவு கொட்டையூரில் பன்னீர் செல்வம் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு சென்று அரிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீர் செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை செய்துவிட்டு செய்வதறியாது சுற்றித் திரிந்த விஜய், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments