ஓமனில் விமான நிலைய வேலை என அழைத்து சென்று மோசடி..!

0 2849

ஓமனில் விமான நிலையத்தில் வேலை என மதுரையை சேர்ந்தவர்களை அழைத்து சென்று கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துவதால் தங்களை மீட்க உதவுமாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த 4பேர் மற்றும் சிவகங்கை, குமரி மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் என 15பேரும் தங்களை அடைத்து வைத்து கொத்தடிமை போல நடத்துவதாக அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர் .

இதனையடுத்து அவர்களை மீட்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பையாவின் தந்தை உள்பட அனைவரும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதனிடையே ஓமனில் உள்ள 15பேரும் தங்களை மீட்க கோரி தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments