குடியிருப்பு பகுதியில் தினந்தோறும் நடமாடும் கரடி.. இரவில் வீட்டிற்கு வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்த மக்கள்..!

0 2718

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரே குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து தினந்தோறும் நடமாடும் கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தினமும் இந்த சம்பவம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இதனால் குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments