ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்.. தாயும் 2 சிசுக்களும் மர்ம மரணம்..!

0 2385

கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி, தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரின் கணவர் இறந்து விட்டார். கர்ப்பமாக இருந்த இவருக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரிடம் ஆதார் உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லாததால் அவரை அங்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், இன்று காலை பிரசவ வலியால் அவர் அலறி துடித்த சத்தத்தை கேட்டு சென்று பார்த்த போது, அங்கு தாயும் 2 சிசுக்களும் இறந்து கிடந்தனர். கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்காத மருத்துவர் உஷா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments