பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் 11 சாய ஆலைகளுக்கு சீல் வைப்பு.!

0 849

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை வெளியேற்றிய 11 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அப்பகுதியில் இயங்கும் பெரும்பாலான சாய ஆலைகள், சாயக்கழிவுகளை ஆற்றில் வெளியேற்றுவதால் தண்ணீர் மாசடைவதாக புகார் எழுந்தது.

மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில், விதிகளை மீறி செயல்பட்ட சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சமயசங்கிலி, ஆவத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஆலைகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments